business

img

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!

வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.8 உயர்ந்துள்ளது.
ஜீலை மாதத்தின் சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ.8 உயர்ந்துள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் ரூ.1,937 ஆக இருந்த சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.1,945 ஆக உயர்ந்துள்ளது.
14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு  சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இன்றி ரூ.1180.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.